Tuesday 17 February 2009

சிலை நிலா !!!!






என் இரவுகள்

இன்னும் இருளில்தான்

நீயில்லாமல்,

விழி விடிகிறதா பார்க்கிறேன் !!!

******************************

அவள் என்னிடம்

பேசியதே இல்லை

ஆம் சிலைகள்

எப்படி பேசும்?

******************************

என் மனதில்

என்னவெல்லாமோ

தோன்றி மறையும்,

நான் அவளை காண நேரிடும்

ஒரேயொரு நொடியில் !!!

*************************************

இன்று வெள்ளி

மீண்டும் திங்களன்று

தெரியும்என்

திங்கள் !!!!

*********************************
இறக்கும் கிழவனிற்கு

காசித் தீர்த்தம்

எனை பிரியும்

தருவாயில்

அவள் பார்வை !!!!

- சிவன் .

நீ !!!!


உன்னை

மறக்கவேண்டும் என

நினைத்திருந்தேன்,

உன் நினைவால்

அதையே மறந்துவிட்டேன் !!!

-சிவன்

counter